டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.;

Update: 2022-04-06 07:32 GMT
இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர்,  டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சுகேஷ் சந்திரசேகரை தவிர, மீதம் உள்ள அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் வைத்து டிடிவி தினகரனிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை கடந்த ஆண்டு விசாரித்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்