"கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழக அரசியல் தளத்தில் இன்றைக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு கோரிக்கைகளை, நிச்சயம் நிறைவேற்றுவேன்...;
"கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழக அரசியல் தளத்தில் இன்றைக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு கோரிக்கைகளை, நிச்சயம் நிறைவேற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார்.
தமிழ்நாடு விவசாய கட்சியின் தலைவர் பொன்குமார் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு நிலவும் கோரிக்கைகளை நிறைவேற்றி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் சாதித்துக் காட்டுவேன் எனக் கூறினார்.