"சொத்து வரி உயர்வு வெறும் டிரைலர்தான்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்;

Update: 2022-04-02 07:32 GMT
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டமன்ற தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பரிசாக, பொங்கல் சிறப்புத் தொகையை தராமல், தமிழக அரசு கைவிரித்ததாக கூறி உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு, சிறப்பு பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாகவும் விமர்சித்து உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்