டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் தாக்குதல் - "காவி சாயம் பூச்சு - சிசிடிவி கேமரா உடைப்பு"

தி காஷ்மீர் பைல்ஸ் பட விவகாரத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-03-30 12:24 GMT
கடந்த வாரம் டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்காக விளம்பரம் செய்யும் பாஜக, பண்டிட்களுக்காக எதுவும் செய்யவில்லை என விமர்சனம் செய்தார். டெல்லியில் வரிவிலக்கு கோருவதற்கு பதில், படத்தை யூடியூப்பில் ஏற்றலாம் எனவும் கூறியிருந்தார். இதற்கு பாஜகவினர் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தலைமையில் பாஜகவினர் கெஜ்ரிவால் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் தடுப்புகளை நீக்கி நுழைவுவாயில் கேட்டில் காவி சாயம் பூசியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் டெல்லி துணை முதல்வர் சிசோடியா, பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர் என்றும் டெல்லி போலீஸ் அவர்களுக்கு துணையாக நிற்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்