"இலங்கையை எச்சரிக்காமல் அரவணைப்பதா?"- மத்திய அரசு மீது சீமான் சாடல்

சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் இலங்கை அரசை எச்சரிக்காமல் இந்திய அரசு அரவணைத்தும், அனுசரித்தும் செல்வது எதிர்காலத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-21 08:44 GMT
சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் இலங்கை அரசை எச்சரிக்காமல் இந்திய அரசு அரவணைத்தும், அனுசரித்தும் செல்வது எதிர்காலத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள அரசுகளின் கொடுங்கோல் ஆட்சியும், இனவெறி செயல்பாடுகளுமே காரணம் என சாடியுள்ளார். இனவெறிக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு நாடு வீழ்ச்சியடையும் என்பதற்கு இலங்கை ஒரு சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்