இந்திய வரலாற்றில் மிகமுக்கியம் மேற்குவங்கம் ஒரு பார்வை

இந்திய வரலாற்றிலும், அரசியலிலும் மிக முக்கிய மாநிலம், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்கம். பல சிறப்பம்சங்களை கொண்ட அந்த மாநிலம் பற்றி சிறிய தொகுப்பு.

Update: 2021-03-04 03:12 GMT
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கம்பீரமாக வீற்றிருக்கும் மாநிலம் என்றால் அது மேற்கு வங்கம். ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஆக சிறந்த ஆளுமைகளை நாட்டிற்கு கொடையாக கொடுத்த பூமி இந்த வங்க பூமி. 88, 752 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் பரந்து விரிந்துகிடக்கும் மேற்கு வங்கம், இந்தியாவின் 14வது மிகப்பெரிய மாநிலம். ஆனால் ஆங்கிலேயர் படையெடுப்பிற்கு முன்னர் தற்போதைய வங்கதேசத்தையும் சேர்த்து வங்காளமாக பரந்து விரிந்து இருந்தது தான் இதனுடைய முந்தைய வரலாறு. உரிமை போராட்டங்களும், மறக்க முடியாத மதவெறி தாக்குதல்களும் வங்க வரலாறில் அழிக்க முடியாதவை. நவராத்திரியை ஒட்டி 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜையும், ஈடன் கார்டனில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியும் கொண்டாட்டங்களில் முந்தி நிற்பவை.

ஒட்டுமொத்தமாக 9 கோடி மக்கள் தொகை கொண்ட  மேற்குவங்கத்தில், 77 சதவீதம் பேர் கல்வி அறிவு கொண்டவர்களாக உள்ளதாக கூறுகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 12.54 லட்சம் கோடி ரூபாயாக இருக்க, மாநில அரசின் கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்... இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 9.8 சதவீதம் பங்கு வகிக்கும் இந்த மாநிலம், 2 சதவீதம் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. அரிசி, கரும்பு, கோதுமை, உருளைக் கிழங்கு போன்றவற்றை அதிகளவில் விளைவித்து வரும் மேற்குவங்கம், இந்தியாவிலேயே ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட மேற்குவங்கத்தில் அதிரடி யுக்திகளை கையாளும் பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது ஆளும் திரிணாமூல் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...
Tags:    

மேலும் செய்திகள்