ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டு கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் சேதம் அதிகம் உள்ளதால் 100 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் கேட்டு பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.;
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நிவர் புயல் காரணமாக விவசாயிகளுக்கு சேதம் அதிகம் என்றும், சாலைகளும், குடிசை வீடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். எனவே இடைக்கால நிவாரணமாக 100 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.