Delhi டெல்லியை அதிரவிட்ட எதிர்க்கட்சிகள் - மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விடுத்த அறிவிப்பு

Update: 2025-12-19 13:47 GMT

கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நிறைவு பெற்றுள்ளது.

கூட்டத் தொடரின் முதல் இரு நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின. பின்னர், வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்த சிறப்பு விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெற்றது. மேலும், துணை மானிய கோரிக்கை, காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% அதிகரிக்கும் மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியபோதும் அதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்