Rahul Gandhi | BJP | 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் - ஓபனாக உடைத்து அட்டாக் செய்த ராகுல்

Update: 2025-12-19 09:10 GMT

நூறு நாள் வேலை திட்டப் பெயர் மாற்றம் என்ற பெயரில் மத்திய அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மோடி அரசு ஒரே இரவில் காணாமல் போகச் செய்துவிட்டதாக விமர்சித்தார்.

மேலும் இந்தத் திட்டம் டெல்லியிருந்து கட்டுப்படுத்தப்படும் திட்டமாக மாறிவிட்டதாக கூறிய ராகுல் காந்தி,

இந்த சட்டம் மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானதாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக பட்டியலின மக்களையும், இதர பிற்படுத்தப்பட்டோரையும் பலவீனப்படுத்தி,

அதிகாரத்தை ஓரிடத்தில் சேர்த்து, சீர்திருத்தம் என்ற பெயரில் விளம்பரம் செய்வதை மோடி அரசு நோக்கமாக கொண்டுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்