"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை" - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-26 11:39 GMT
80-வது அகில இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பின் மீது, ஒவ்வொருவரும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க தொடர்ச்சியான பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த கொரோனா காலகட்டத்திலும் நமது தேர்தல் அமைப்பின் வலிமையை இந்த உலகமே பார்த்ததாக குறிப்பிட்ட பிரதமர் இது, எளிதான காரியம் அல்ல என்றார். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது பெரும் விவாதம் மட்டுமல்ல, இந்திய நாட்டின் தேவை என குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது, நாட்டின் வளர்ச்சி பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்