"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-03 17:01 GMT
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர்,  ஏற்கனவே விமானம் மற்றும் பேருந்து சேவைகள் தனியாரிடம் சென்றுவிட்ட நிலையில், அரசு பேருந்துகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.  ரயில் பயணம் என்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து என்றும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் குறைந்த கட்டணத்தில் மக்கள் ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்