பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Update: 2020-04-06 12:00 GMT
அதன் காரணமாக இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எப்போதெல்லாம் பா.ஜ.க. ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நல்ல நிர்வாகம் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கட்சி கவனம் செலுத்துவதாகவும், பிரதமர் விடுத்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இல்லாதோருக்கு  உதவிட வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்