மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.;

Update: 2020-02-27 02:28 GMT
மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி  டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட ராம்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை  மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பல வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அசம்கான் உள்ளிட்ட மூவருக்கு  சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணைக்கு  ஆஜராகாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. எந்த வழக்கிலும் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், 3 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்