2009 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு : ஆஜராக அவகாசம் கோரிய ப.சிதம்பரம்
2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.;
2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் எனக் கோரியுள்ளார். இதனை ஏற்ற நீதிபதி, குறுக்கு விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி 7 ம் தேதி வரை சிதம்பரத்திற்கு அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தார்.