"சபரிமலையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி" - கேரள அறநிலையத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

சமூக ஆர்வலர் திருப்தி தேசாயின் வருகையை வைத்து சபரிமலையில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் கூட்டு திட்டம் போடுவதாக கேரள அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-11-27 05:03 GMT
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து உள்பட 7 பேர் கொண்ட குழு கேரளா வந்துள்ளது. கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல அவர்கள்  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அமைதியாக நடைபெற்றுவரும் மண்டலபூஜை மகரவிளக்கு விழாவில் குழப்பத்தில் ஏற்படுத்தும் முயற்சி இது எனக் குற்றம்சாட்டினார். சபரிமலைக்கு வந்த பெண் மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்தது கண்டிக்கதக்கது என்றார். இந்த கும்பலுக்கு கேரள அரசு துணை நிற்காது எனவும் கேரள அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்