"அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" - ஸ்டாலின்

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-28 11:35 GMT
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் பற்றியோ, போராட்டம் நடத்துவோர் பற்றியோ அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். 

ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்தவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தினை சுமூகமான ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் கால தாமதம் இன்றி எடுக்க வேண்டும் எனவும், அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் முறையான பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்படுவற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், அ.தி.மு.க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எல்லாம் திமுக ஆட்சியின் போது நிச்சயம் ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்