GRT Jewellers டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் 2025 - ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸுக்கு பெருமை
ஆபரணத் துறையில் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் 2025 விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
ஜி.ஆர்.டி., பாரம்பரிய கைவினை நுட்பத்தையும், நவீன புதுமையையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது.
1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தென் இந்தியாவில் 65 ஷோரூம்களும், சிங்கப்பூரில் ஒரு ஷோரூமுமாக மொத்தம் 66 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விருது, நகைத்துறையில் நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.