அன்பழகன் பிறந்த நாளில் சிறப்பு நிவாரண முகாம்கள்
அன்பழகனின் 97-வது பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனின் 97-வது பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அன்றைய தினம், சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்ய வேண்டும் என்றும், உடல்நலம் குன்றியிருக்கும் பொதச் செயலாளர் அன்பழகனை பிறந்த நாள் அன்று சிரமப்படுத்த வேண்டாம் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.