Ranippet BJP Cadre Arrest | "மத நல்லிணக்கத்திற்கு பங்கம்.." - பாஜக நிர்வாகி கைதால் பரபரப்பு
ராணிப்பேட்டையில் மதநல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதாக எழுந்த புகாரில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கைது செய்தனர். இப்ராஹிம் பள்ளிவாசலில் தொழுகை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஜமாத் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் தொழுகை செய்ய வெளியே வந்த போது கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.