இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் ​​பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

Update: 2018-10-27 02:03 GMT
இலங்கையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில்அதிபராக இருந்த ராஜபக்சே தோல்வியடைந்ததை தொடர்ந்து இலங்கை விடுதலை கட்சி (SLFP) மற்றும் ரனில் தலைமையிலான ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் அமைந்த ஆட்சியில், அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரனில் விக்கிரசிங்கேவும் பதவி ஏற்றனர். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அறிவித்தார். சிறிது நேரத்தில் ராஜபக்சேவும் சிறிசேனாவும் கூட்டணி அமைத்ததோடு, இரவிலேயே இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபர் மாளிகையில் அதிபரி சிறிசேனா முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்கிரமசிங்கேவை நீக்குவதாகவும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதனால், இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ரனில் திரும்பிய நிலையில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்