சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு - எழுந்த கடும் குழப்பம்

Update: 2024-05-19 02:14 GMT

தமிழக அரசின் வேளாண்துறையில் வேளாண் அலுவலர் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு, வரும் 21, 22, 23-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், ஜூன் 10ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று இடைக்கால தடை விதித்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, டிஎன்பிஎஸ்சி தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடாததால்,

நேர்முகத் தேர்வுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த விண்ணப்பதாரர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தங்களது முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், திருமணத்திற்கு செல்லக்கூடிய பல விண்ணப்பதாரர்கள் தவிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்