பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்து..மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதி | Bihar Train Accident

Update: 2023-10-12 16:46 GMT

பீகாரில், வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். டெல்லி ஆனந்த் விஹாரிலிருந்து புறப்பட்ட வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்தது. பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே, நேற்றிரவு தடம்புரண்டது. 21 பெட்டிகள் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே தெரிவித்துள்ளார். இதனிடையே, ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்