நெஸ்லே நிறுவனத்தின் மீது எழுந்த பகீர் புகார் - உடனே பறந்த முக்கிய உத்தரவு

Update: 2024-04-19 04:22 GMT

நெஸ்லே நிறுவனத்தின் மீது எழுந்த பகீர் புகார் - உடனே பறந்த முக்கிய உத்தரவு

#nestlé | #thanthitv

நெஸ்லே நிறுவனத்தின் உணவுப்பொருட்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணயம் உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் புலனாய்வு அமைப்பான பப்ளிக் ஐ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா உள்ளிட்ட ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான உணவில் நெஸ்லே நிறுவனம் சர்க்கரையை சேர்ப்பதாக கூறியுள்ளது.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் அதே குழந்தை உணவுகளில் பூஜ்ஜியம் என்ற அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளது.

நெஸ்லை மற்றும் இதர நிறுவனங்களால் தயாரித்து மார்க்கெட்டிங் செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் உள்ள சக்கரை அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு, 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா?

முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா?

குழந்தைகள் உணவு பொருட்களுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? என்பது குறித்த அனைத்து விபரங்களையும் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்