ஜனவரி 1 முதல்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! | Sabarimala Online

Update: 2023-12-25 03:26 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், சனிக்கிழமை வரை 26 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். ஜனவரி முதல் ஸ்பாட் புக்கிங் வரம்பை 15 ஆயிரமாக உயர்த்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில் சபரிமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்