"அனைவருக்கும் நன்றி" - இண்டிகோ CEO உருக்கமான அறிவிப்பு
மிக மோசமான நிலையை கடந்துவிட்டதாக இண்டிகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி பியட்டர் எல்பர்ஸ், தெரிவித்துள்ளார்.
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, காணொளி காட்சி வாயிலாக ஊழியர்களுடன் பேசிய செயல் அதகாரி, இந்த புயலுக்கு மத்தியில் நாம் மீண்டும் நமது சிறகுகளைக் கண்டறிந்துள்ளதாக கூறினார்.
கடந்த இரண்டு வாரங்கள் நம் அனைவருக்கும் மிகவும் சவாலானவையாக இருந்ததாகவும்,
இண்டிகோ நிறுவம், தற்போது இரண்டாயிரத்து 200 விமானங்களின் வலையமைப்பை மீட்டெடுத்துள்ளதாக கூறினார்.
சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, குறுகிய காலத்தில் சவாலான சூழலில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி என கூறினார்.