முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு - 12-ம் தேதி தீர்ப்பு

Update: 2024-01-07 05:50 GMT

பாலியல் வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது, மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அதுவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் இம்மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக வாதிட்டனர்.

அதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு நகலை ஏன் சமர்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பூர்ணிமா, வரும்12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்