"2020-ல் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு"

கடந்த 2020ம் ஆண்டில், நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-30 23:45 GMT
கடந்த 2020ம் ஆண்டில், நாடு  முழுவதும் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இணையவழி குற்றங்கள்" தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2016 ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்கள், 12 ஆயிரத்து 317 ஆக இருந்த நிலையில், 2017ம் ஆண்டு 21 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2018ம் ஆண்டு 27 ஆயிரத்து 248 சைபர் குற்றங்களும், 2019ம் ஆண்டு 44 ஆயிரத்து 735 ஆக அதிகரித்த நிலையில்,  2020ம் ஆண்டில் 50,035 இணையவழி குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்து உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட 2020ம் ஆண்டில், இரு மடங்காக சைபர் குற்றம் அதிகரித்து உள்ளது. 

 2020ம் ஆண்டில் இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில்  11 ஆயிரத்து 097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்