ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் - யோகநரசிம்மர் கோலத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 3 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.;
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 3 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3 ஆவது நாளான இன்று யோகநரசிம்மர் கோலத்தில், சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில், ஜீயர்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாட அர்ச்சகர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர்.