தேனி அருகே திமுக நகராட்சி தலைவரின் கணவரின் ஏலக்காய் குடோன், அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகசோதனையில் ஈடுபட்டனர். போடியை சேர்ந்தவர் சங்கர். திமுக பிரமுகரான இவர், ஏலக்காய் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது வீட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில், சுமார் 28க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். ஏலக்காய் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சோதனை நடப்பதாகவும், சங்கர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது