போக்குவரத்து காவலரை தாக்கிய ஓட்டுநர் - இணையத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பகுதியில் வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி செல்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அதனை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.

Update: 2021-09-26 03:09 GMT
அப்போது வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் நாகராஜை பிடித்து விசாரித்த போது போக்குவரத்து காவலர் சுபாஷை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து காவலரை ஓட்டுநர் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்