விநாயகர் சதுர்த்தி விழா - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு

கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-05 07:14 GMT
கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த சிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. வீடுகளில் வைக்கப்படும் சிலை 2 அடியாகவும், பொது இடங்களில் வைக்கப்படும் சிலை 4 அடியாகவும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், விநாயகரின் சிலைகளை செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்களில் கரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்