பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம்?

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Update: 2021-09-05 03:34 GMT
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பயணத்தின் பின்னணி என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டு பயணங்களை முற்றிலும் தவிர்த்து வரும் பிரதமர் மோடி, முக்கியமான மாநாடுகளில் மட்டும் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றி வருகிறார்..

குறிப்பாக ஜூன் மாதம் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பைடன் உட்பட முக்கிய உலக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வாய்ப்பு தவறியது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடனை முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

ஒருவேளை சந்திப்பு உறுதி செய்யப்பட்டால், பிரதமர் மோடி வருகிற 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது

இதில் முக்கியமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பற்றி பிரதமர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இதோடு, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் பிரதமர் ஆலோசிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்க்லா, நவம்பர் மாதத்தில் இந்தியா - அமெரிக்க அமைச்சர்கள் இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார்

இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பர் எனவும் சிரிங்க்லா தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்