தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

Update: 2021-06-04 03:48 GMT
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, இந்தியாவிற்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக கமலா ஹாரிஸ் உறுதி அளித்ததாக குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்கா இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பதற்கு, கமலா ஹாரிஸிடம் நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்