சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு - இளைஞர்களின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

பூனாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சமையலறை கழிவுகளை சமையல் எரிவாயுவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Update: 2021-02-11 08:22 GMT
பூனாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சமையலறை கழிவுகளை சமையல் எரிவாயுவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது,. பொதுமக்களிடம் இருந்து சமையறை கழிவுகளை சேகரிக்கும் அவர்கள் அதனை எரிவாயுவாக மாற்றுவதற்காக நகர் முழுவதும் 220 இடங்களில் அதற்கான உபகரணங்களை அமைத்துள்ளனர்,. பின்னர் அதில் இருந்து சேகரிக்கப்படும் எரிவாயு நேரடியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு செல்லும் வகையில் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது,. இதனால் சமையலறை கழிவுகள் முறையாக அகற்றப்படுவதுடன் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு தங்குதடையின்றி கிடைப்பதாகவும் அத்திட்டத்தை உருவாக்கியுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்