அகமதாபாத்தில் காணப்பட்ட உலோக மர்ம தூண்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பூங்கா ஒன்றில் மோனோலித் என்று அழைக்கப்படக்கூடிய உலோகத்தூண் திடீரென காணப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2021-01-02 04:23 GMT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பூங்கா ஒன்றில் மோனோலித் என்று அழைக்கப்படக்கூடிய உலோகத்தூண் திடீரென காணப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் முப்பரிமாண வடிவில் பளபளவென்று இருக்கும் உலோக தூணை கான படையெடுத்தனர்.  அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற தூண்கள் திடீரென தோன்றுவதற்கு பின்னால் வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் தூணை நிறுவியது பூங்கா நிர்வாகம்தான் என்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்