அஞ்சனாத்திரி மலையில் அவதரித்தாரா ஆஞ்சநேயர் - ஆய்வு நடத்த ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவு

திருப்பதி சேஷாச்சல மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்பது குறித்து ஆய்வு நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-21 14:05 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் உள்ளன. இதில், அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி நீண்ட காலம் கடுமையாக தவமிருந்து, திருமலையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடி, அதன் பயனாக ஜபாலி என்னும் இடத்தில், ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே அஞ்சனாத்திரி மலையில் உள்ள ஜபாலியில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்று ஆய்வு மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோயில் ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்