ரூ.26 லட்சம் கடன் பெற்று மோசடி - அரசு பள்ளி ஆசிரியர் மீது தம்பதி புகார்

புதுச்சேரியில் 26 லட்சம் ரூபாய் கடனை திரும்ப தராத அரசு பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-08 07:19 GMT
புதுச்சேரியில் 26 லட்சம் ரூபாய் கடனை திரும்ப தராத அரசு பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த நீலவாண‌ன் கவிப்பிரியா தம்பதி, தன் உறவினரான அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக நகை பணம் என 26 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளனர். பணத்தை , திருப்பி கேட்டபோது, தாதுமணல், யுரேணியம் கடத்துவதாக நீலவாண‌ன் மீது செல்வம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தன் மீது பொய்ப்புகார் அளித்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை மீட்டு தர கோரியும் நீலவாண‌ன் - கவிப்பிரியா தம்பதி காவல்துறை இயக்குநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்