இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

Update: 2020-10-25 08:16 GMT
மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி விழா  கொண்டாடப்படுகிறது. விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசுகையில், சட்டம் எந்தஒரு மதத்தினருக்கும் எதிரானது கிடையாது என்றும் இருப்பினும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளது என பொய்யான பரப்புரையை மேற்கொண்டு போராட்டங்களை தூண்டினர் என்றும் குற்றம் சாட்டினார். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையையும்  கட்டவிழ்த்துவிட்டனர் எனக் கூறினார். இதுகுறித்து மேலும் விவாதிப்பதற்குள் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் கவனம் திசைமாறிவிட்டது என்ற அவர், சிலரது மனதில் மட்டுமே மதவாத எண்ணங்கள் இருந்துக்கொண்டே இருக்கும் எனக் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்