எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் - பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த டெல்லி அரசு திட்டம்

எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கும் மக்களுக்கு, டெல்லி அரசு மானியத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் முறை விரைவில் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-10-05 07:24 GMT
எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கும் மக்களுக்கு, டெல்லி அரசு மானியத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் முறை விரைவில் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. டெல்லி மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது. இதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகம் வாங்குபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், கார்கள் வாங்குபவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை நீக்குவது தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓராண்டிற்குள் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு ரீசார்ஜ் மையங்கள் என மொத்தம் 200 மையங்கள் திறக்கவும் டெல்லி மாநில அரசு திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்