ரூ.2000 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ரியா ஆன் தாமஸ் -3 வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் 2ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட, ரியா ஆன் தாமஸ்க்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரை மூன்று வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-23 03:23 GMT
கேரளாவில் 2ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட, ரியா ஆன் தாமஸ்க்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரை மூன்று வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி, 5-வது குற்றவாளியாக, ரியா ஆன் தாமஸை  மலப்புரத்தில் போலீசார் கைது செய்தனர். இவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்தனர். இந்த  நிலையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மூன்று வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்