கொரியர் மூலம் அசாமில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் லாரி பேட்டரி என குறிப்பிட்டு கஞ்சா கடத்தல் பேட்டரி பெட்டியில் கஞ்சாவை நிரப்பி கடத்தியது அம்பலம்அசாமில் இருந்து கொரியர் மூலம் கஞ்சா கடத்தி வந்த சட்டக்கல்லூரி மாணவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-09-21 15:12 GMT
சென்னை மயிலாப்பூரில்  கஞ்சா விற்பனை நடந்து வருவதாக  வந்த  தகலின் பேரில் விசாரணை நடத்திய  போலீசார் ,  மயிலாப்பூரைச் சேர்ந்த யாசர் ஹனீப் மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த சக்திவேலை  கைது செய்தனர் . அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாசர் ஹனீப் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது தெரிய வந்துள்ளது .  இருவரும் சென்னையில் கட்டிட வேலை மற்றும் பிற வேலைகள் பார்த்து வரும் அசாமை சேர்ந்தவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

அவர்  உதவியுடன் , அசாமில்  கிடைக்கும் நெதர்லாந்து பட் என அழைக்கப்படும் உயர்தர கஞ்சாவை கடத்தி சென்னையில் விற்பது என முடிவு செய்துள்ளனர்.

 லாரிகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் உள்ளே இருக்கும் தண்ணீருக்கு பதிலாக  கஞ்சாவை நிரப்பி  உள்ளனர் 
இதன் பின்பு இந்தியாவில் பிரபலமாக செயல்படக்கூடிய தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் லாரி பேட்டரி என குறிப்பிட்டு அசாமில் இருந்து சென்னைக்கு அனுப்பி வந்துள்ளனர் .  பேட்டரி சென்னைக்கு வந்தவுடன் அதிலுள்ள கஞ்சாவை பிரித்து 10 கிராம் கஞ்சா பத்தாயிரம் ரூபாய்க்கு  விற்பனை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் கைது செய்து மயிலாப்பூர் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் மேலும் இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்