திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனை : மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திறப்பு

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.

Update: 2020-02-28 11:17 GMT
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே அவர்களுக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரத்யேக மருத்துவமனை கோரிக்கை நனவாகியுள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில், மாதம் 2 நாள் செயல்படும் வகையில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்