நித்தியானந்தாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பிடதி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவரை மீட்கக்கோரிய வழக்கில், நித்தியானந்தாவிற்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-20 13:21 GMT
கர்நாடகா மாநிலம்  பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார். அவருக்கு பிராணாசாமி என அங்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அண்மையில்  நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முருகானந்தத்தை சந்திக்க அவரது தாய் பிடதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, தனது மகனை மீட்டுத் தரக்கோரி, அவரது தாய் அங்கம்மாள்  உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு போலீசார்  மற்றும் நித்தியானந்தாவிற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்