பெண் எம்.பி.க்களை பலவந்தமாக தள்ளுவதா...? மக்களவை மார்ஷல்கள் மீது சோனியா புகார்

பெண் எம்.பிக்களை, பலவந்தமாக தள்ளியதாக மக்களவை மார்ஷல்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-25 20:41 GMT
பெண் எம்.பிக்களை, பலவந்தமாக தள்ளியதாக மக்களவை மார்ஷல்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் சார்பில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் கைகளில் இருந்த பதாகைகளை புடுங்கியதோடு, அவர்களை வலுகட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட மார்ஷல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்