மேற்குவங்கத்தில் 120 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த புயல்

மேற்குவங்கத்தை அசுர வேகத்தில் தாக்கிய புல்புல் புயல், இரவு பதினொன்றரை மணி அளவில், கரையை கடந்தது.

Update: 2019-11-10 10:13 GMT
மேற்குவங்கத்தை அசுர வேகத்தில் தாக்கிய புல்புல் புயல், இரவு பதினொன்றரை மணி அளவில், கரையை கடந்தது. இரவு 8 மணி அளவில் சாகர் தீவு பகுதியில் நிலப்பகுதியை தொட்ட புயல், பலமாக தாக்கியது. கனமழையும், காற்றுமாக சுந்தர்பான் பகுதியில் மையம் கொண்டு தாக்கியது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வீசிய சூறைக்காற்றில், வீட்டின் கூரைகள் பறந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. இரண்டரை மணி நேரம் நங்கூரம் இட்டதை போல், மிரட்டிய புல்புல் புயல், தான்ஜி வனப்பகுதியையொட்டி கரையை கடந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடங்கியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்