டெல்லி வழக்கறிஞர்கள் போராட்டம் 3-வது நாளை எட்டியது

கடந்த இரண்டாம் தேதி டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்;

Update: 2019-11-06 09:35 GMT
கடந்த இரண்டாம் தேதி டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. தங்கள் மீது தடியடி நடத்தியவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என சாக்கேத் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்