இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் - சர்வதேச நிதியத்தின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு வெளியீடு

நடப்பு நிதியாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறித்த அறிக்கையை பன்னாட்டு நிதியம் நேற்று வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.

Update: 2019-10-16 11:41 GMT
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 6.1 சதவீதம் என்கிற இருக்கும் என்றும், இது  கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட 7.3 சதவீத கணிப்பை விட 1.2 சதவீதம் குறைவாகும் என்றும் கூறினார்.

அமெரிக்கா - சீனா இடையே நிலவிவரும் வர்த்தக போரினால், 2019 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் என்கிற மந்த நிலையை அடையும் என்று குறிப்பிட்டார்.

வேகமாக வளரும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளதாக ஐ. எம். எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, வர்த்தக தடைகளை விலக்கி, சர்வதேச முதலீடு, உற்பத்தி மற்றும் உலக வர்த்தகம் மேம்படுவதற்கு இரு நாட்டு அரசுகளும் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்