காலம் எல்லா காயங்களை ஆற்றும் - அசோக் பார்மர்

குஜராத் கலவரத்தின் போது கையை கூப்பி கண்ணீருடன் நின்ற குதுபுதீனின் படம் பரிதாபத்தையும் காவி உடையில் கையில் வாளுடன் நின்ற அசோக் பார்மரின் புகைப்படம் கலவரக்காரர்களின் அடையாளமாகவும் விளங்கியது.

Update: 2019-09-10 14:42 GMT
குஜராத் கலவரத்தின் போது, கையை கூப்பி கண்ணீருடன் நின்ற குதுபுதீனின் படம், பரிதாபத்தையும், காவி உடையில் கையில் வாளுடன் நின்ற அசோக் பார்மரின், புகைப்படம் கலவரக்காரர்களின் அடையாளமாகவும் விளங்கியது. இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று தற்போது இணைபிரியாத நண்பர்களாக திகழ்கின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அசோக்பார்மர், துவங்கியுள்ள புதிய காலனி கடையை, குதுபுதீன் திறந்து வைத்தார். இதன் மூலம், ஜாதி, மதம், இவற்றை கடந்து மனித நேயம் நிலைத்து நிற்கும் என்றும் காலம் எல்லா காயங்களை ஆற்றும் என்பது தெளிவாக புரிவதாக, அசோக் பார்மர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்