இந்தியா- நேபாளம் இடையே குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி வைப்பு

இந்தியா - நேபாளம் இடையில் குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-10 10:49 GMT
இந்தியா - நேபாளம் இடையில் குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் இணைந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  பிகார் மாநிலத்தின்  மோதிகரியில் இருந்து நேபாளத்தின் அமெல்கன்ச் (Amlekhganj) வரை குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெற்காசிய அளவில் எல்லைகளைக் கடந்து முதல் முறையாக பெட்ரோலியம் கொண்டு செல்ல இருப்பதாகவும், வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்