வெளிநாட்டு வேலைக்கு சென்று சிக்கிய இந்தியர்களை மீட்டவர் : சமூக வலைதளங்களில் நினைவுகள் பகிர்வு

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சிக்கல்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பல நடவடிக்கைகளை எடுத்தவர் என்று சமூக வலைதளங்களில் பலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Update: 2019-08-07 07:41 GMT
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு  குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் பலரும்,  இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் சிக்கல் என்றால், சுஷ்மா ஸ்வராஜ்  உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
 
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களுக்கு உதவும் விதமாக,  டுவிட்டர் பதிவிட்டுள்ள சுஷ்மா,  நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டாலும் எனக்கு தகவல் கொடுங்கள். நான் உங்களை காப்பாற்றுவேன் என்று  கூறி நம்பிக்கை அளித்துள்ளார்.

கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவை மீண்டும் பதவியேற்றபோது, வாழ்த்து தெரிவித்த சுஷ்மா,  கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய மரியாதை அளித்தனர் என்றும், அதற்காக பிரதமர் மோடிக்கு  நன்றி என்றும் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். 

வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவசர கோரிக்கைகளுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு கண்டுள்ளனர் என்றும்,  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை  வழங்குவதில் முக்கிய காரனமாக இருந்தவர் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்